குறள் 186:
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்திறன்தெரிந்து கூறப் படும்.பொருள் (மு.வ):மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.
குறள் 185:
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்புன்மையாற் காணப் படும்.பொருள் (மு.வ):அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.
குறள் 184:
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்கமுன்னின்று பின்நோக்காச் சொல்.பொருள் (மு.வ):எதிரே நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.
குறள் 182:
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்அறங்கூற்றும் ஆக்கத் தரும். பொருள்கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று.
குறள் 182:
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதேபுறனழீஇப் பொய்த்து நகை.பொருள் (மு.வ):அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.
குறள் 181:
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்புறங்கூறான் என்றல் இனிது.பொருள் (மு.வ):ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.
குறள் 180:
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்வேண்டாமை என்னுஞ் செருக்கு.பொருள் (மு.வ): விளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.
குறள் 179:
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்திறன்அறிந் தாங்கே திரு. பொருள் (மு.வ): அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.
குறள் 178:
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமைவேண்டும் பிறன்கைப் பொருள். பொருள் (மு.வ): ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.
குறள் 177:
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்மாண்டற் கரிதாம் பயன்.பொருள் (மு.வ):பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.



