• Sat. May 18th, 2024

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 628

குறள் 628

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்துன்பம் உறுதல் இலன் பொருள் (மு.வ): இன்பமானதை விரும்பாதவனாய்த்‌ துன்பம்‌ இயற்கையானது என்று தெளிந்திருப்பவன்‌ துன்பம்‌ வந்தபோது துன்ப முறுவது இல்லை.

குறள் 627

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்கையாறாக் கொள்ளாதாம் மேல் பொருள் (மு.வ): மேலோர்‌, உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம்‌ வந்தபோது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக்‌ கொள்ளமாட்டார்‌.

Thirukkural 22:

As counting those that from the earth have passed away,‘Tis vain attempt the might of holy men to say. Meanings:To describe the measure of the greatness of those who have…

குறள் 626

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்றுஓம்புதல் தேற்றா தவர் பொருள் (மு.வ): செல்வம்‌ வந்தபோது இதைப்‌ பெற்றோமே என்று பற்றுக்‌ கொண்டு காத்தறியாதவர்‌, வறுமை வந்தபோது :இழந்தோமே என்று அல்லல்படுவாரோ?

குறள் 625:

அடுக்கி வரினும் அழிவிலான் உற்றஇடுக்கண் இடுக்கட் படும்.பொருள் (மு.வ):விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.

குறள் 625:

அடுக்கி வரினும் அழிவிலான் உற்றஇடுக்கண் இடுக்கட் படும்.பொருள் (மு.வ):விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.

குறள் 624:

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்றஇடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. பொருள் (மு.வ): தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.

Thirukkural 21:

The settled rule of every code requires, as highest good,Their greatness who, renouncing all, true to their rule have stood. Meanings:The end and aim of all treatise is to extol…

குறள் 623

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்குஇடும்பை படாஅ தவர் பொருள் (மு.வ): துன்பம்‌ வந்தபோது அதற்காக வருந்திக்‌ கலங்காதவர்‌ அந்தத்‌ துன்பத்திற்கே துன்பம்‌ உண்டாக்கி அதை வென்று விடுவர்‌.

குறள் 622

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்உள்ளத்தின் உள்ளக் கெடும் பொருள் (மு.வ): வெள்ளம்போல்‌ அளவற்றதாய்‌ வரும்‌ துன்பமும்‌, அறிவுடையவன்‌ தன்‌ உள்ளத்தினால்‌ அத்‌துன்பத்தின்‌ இயல்பை நினைத்த அளவில்‌ கெடும்‌.