• Mon. Jan 20th, 2025

கோவை கமிஷனர் ஆபீசில் மதுரை பாபு மற்றும் ஆந்திரா வங்கி மேலாளர் மீது புகார் மனு

BySeenu

May 18, 2024

கோவை காளப்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி இவரது மகன் மகாலிங்கம் (52). கோவை கமிஷனர் ஆபீசில் புகார் மனு ஒன்றை நேரில் அதன்படி மகாலிங்கம் கூறியதாவது இவர் தங்களுக்கு சொந்தமான நேரு நகர் பகுதியில் உள்ள நிலத்தை தமது நண்பர் மனோகரன் கேட்டுக் கண்டதற்கு இணங்க , தொழில் செய்வதற்காக கேட்டிருந்தார். மனோகரன் திருப்பூரில் உள்ள ஆந்திரா வங்கியில் மகாலிங்கத்தின் நிலத்தை அடமானம் வைத்து ரூ 85 லட்சம் கடன் வாங்கினார். கடந்த 2010 இருந்து வங்கி அதிகாரிகள் தொடர்ந்து வங்கிக்கு ரூ.1,56,00, 00 பணம் கட்ட வேண்டும் என்று நோட்டீஸ அனுப்பி வந்தனர். இதனால் மகாலிங்கம் தங்களுடைய நிலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் வங்கி அதிகாரிகள் கேட்ட ரு.90 லட்சம் பணத்தை பல்வேறு தவணை முறைகளில் வங்கியில் செலுத்தினர். அதற்குப் பின்பும் ரூ 56 லட்சத்தை தயார் செய்து திருப்பூர் ஆந்திரா வங்கியில் செலுத்தி தங்களது நிலம் தொடர்பான ஆவணத்தை எடுப்பதற்கு முயற்சி செய்தனர். ஆனால் ஆந்திரா வங்கியில் சொத்து தொடர்பாக வசூல் செய்யும் மதுரை பாபு என்பவர் வங்கி மேலாளர் உடன் இணைந்து எனது சொத்தை வேறொரு நபருக்கு போலியாக ஆவணங்கள் தயாரித்து விற்று விட்டனர். ஆனால் எங்கள் இடத்தில் கடன் வாங்கியதற்கான பணத்தை செலுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் உங்களது ஆசையும் ஆசையா சொத்துக்களை ஜப்தி செய்வோம் என்று கூறினார்கள். இதைத் தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கு தங்களுக்கு சாதகமாக வந்தது. உடனடியாக நீங்கள் டி ஆர் ஏ டி சென்னை நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தனர். கடந்த 9 5 2024 அன்று வங்கிக்கு உடனடியாக மகாலிங்கம், நில ஆவணத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு அனுப்பினர். ஆனாலும் உயர் நீதிமன்றம் மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்கள் அனுப்பிய உத்தரவு கடிதங்களை ஏற்காமல் மதுரை பாபு மற்றும் ஆந்திரா வங்கியின் மேலாளர் தொடர்ந்து எங்களை நிர்பந்தம் செய்து வருகிறார்கள். இது தொடர்பாக இன்று கோவை கமிஷனர் ஆபீசில் மதுரை பாபு மற்றும் ஆந்திரா வங்கி மேலாளர் மீது புகார் மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தனர்.