• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 761:

குறள் 761:

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்வெறுக்கையுள் எல்லாம் தலை. பொருள் (மு.வ): எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

குறள் 760:

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்ஏனை இரண்டும் ஒருங்கு.பொருள் (மு.வ):சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒரு சேரக்கைகூடும் எளிய பொருளாகும்.

குறள் 759:

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்எஃகதனிற் கூரிய தில்.பொருள் (மு.வ):ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.

குறள் 758:

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்றுஉண்டாகச் செய்வான் வினை.பொருள் (மு.வ):தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது.

குறள் 757:

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்செல்வச் செவிலியால் உண்டு. பொருள் (மு.வ):அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக் கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.

குறள் 756:

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்தெறுபொருளும் வேந்தன் பொருள்.பொருள் (மு.வ):இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.

குறள் 755:

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்புல்லார் புரள விடல்.பொருள் (மு.வ):அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.

குறள் 754:

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்துதீதின்றி வந்த பொருள். பொருள் (மு.வ):சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.

குறள் 753:

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்எண்ணிய தேயத்துச் சென்று. பொருள் (மு.வ)பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்.

குறள் 752:

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரைஎல்லாரும் செய்வர் சிறப்பு.பொருள் (மு.வ):பணம் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வந்தரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்.