• Sat. May 4th, 2024

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 619

குறள் 619

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும் பொருள் (மு.வ): ஊழின்‌ காரணத்தால்‌ ஒரு செயல்‌ முடியாமல்‌ போகுமாயினும்‌, முயற்சி தன்‌ உடம்பு வருந்திய வருத்தத்தின்‌ கூலியையாவது கொடுக்கும்‌.

Thirukkural 18:

If heaven grow dry, with feast and offering never more,Will men on earth the heavenly ones adore. Meanings:If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be…

குறள் 618

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்துஆள்வினை இன்மை பழி பொருள்( மு .வ): நன்மை விளைக்கும்‌ ஊழ்‌ இல்லாதிருத்தல்‌ யார்க்கும்‌ பழி அன்று; அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

Thirukkural 17:

If clouds restrain their gifts and grant no rain,The treasures fail in ocean’s wide domain. Meanings:Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has…

குறள் 617

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்தாளுளான் தாமரையி னாள் பொருள் (மு.வ): ஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்றாள்‌; சோம்பல்‌ இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள்‌ வாழ்கின்றாள்‌.

Thirukkural 17:

If clouds restrain their gifts and grant no rain,The treasures fail in ocean’s wide domain. Meanings:Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has…

குறள் 616

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும் பொருள் (மு. வ): முயற்சி ஒருவனுக்குச்‌ செல்வத்தைப்‌ பெருகச்‌ செய்யும்‌; முயற்சி இல்லாதிருத்தல்‌ அவனுக்கு வறுமையைச்‌ சேர்த்து விடும்‌.

Thirukkural 16:

If from the clouds no drops of rain are shed.‘Tis rare to see green herb lift up its head. Meanings:If no drop falls from the clouds, not even the green…

குறள் 615

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண் பொருள் (மு.வ): தன்‌ இன்பத்தை விரும்பாதவனாய்‌ மேற்கொண்ட செயலை முடிக்க விரும்புகின்றவன்‌, தன்‌ சுற்றத்தாரின்‌ துன்பத்தைப்‌ போக்கித்‌ தாங்குகின்ற தூண்‌ ஆவான்‌.

Thirukkural 15:

‘Tis rain works all: it ruin spreads, then timely aid supplies;As, in the happy days before, it bids the ruined rise. Meanings: Rain by its absence ruins men; and by…