

ஒரு கப் கேரட் துருவலுடன் 4 வெள்ளரித் துண்டுகள் சேர்த்து நன்கு அரைக்கவும். இதை வடிகட்டினால் வழுவழுவென்று க்ரீம் போல வரும். அதை கண்களைச் சுற்றி அப்ளை செய்வதோடு, ஒரு துணியில் தோய்த்து கண்களுக்கு மேற்புறமும் வைத்துக்கொள்ளவும். 10 நிமிடங்கள் கழித்து துணியை எடுத்துவிட்டு, க்ரீமை கழுவாமல் அப்படியே விட்டுவிடவும். இது கண்களை பளிச் என்று ஆக்கும், கூரிய பார்வை கிடைக்கச் செய்யும். இதை முகம், கைகளுக்கு மாய்ஸ்ச்சரைசர் ஆகவும் பயன்படுத்தலாம்.