• Mon. Mar 27th, 2023

அந்த டயலாக் ரஜினி சாருக்கு பிடிக்கல – பா ரஞ்சித்!

அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பா ரஞ்சித். தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் என்ற சூப்பர் ஹிட் வெற்றி படத்தை கொடுத்தார்! மூன்றாவது படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து கபாலி திரைப்படத்தில் நடித்திருந்தார்!

இந்நிலையில் ரஜனிகாந்த் கபாலி படத்தில் பேசிய ஒரு குறிப்பிட்ட வசனம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பேசி மகிழ்ந்தார்கள். ஆனால் அந்த வசனம் எடுக்கப்பட்டபோது ரஜினிகாந்துக்கு அந்த வசனம் பிடிக்கவில்லையாம். இந்த மாதிரி நான் பேசினால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என சந்தேகத்துடனேயே ரஜினிகாந்த் அந்த வசனத்தை பேசி உள்ளார். பா ரஞ்சித் கண்டிப்பாக இந்த வசனம் ஹிட்டாகும் சார் என நம்பிக்கையாக கூறியுள்ளார்.

டயலாக் மிகப்பெரிய வைரலான செய்தியை கேள்விப் பட்ட ரஜினிகாந்த் உடனடியாக பா ரஞ்சித்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு நீங்க சொன்னது தான் கரெக்ட்டு சார்.. டயலாக் எல்லாருக்கும் பிடிச்சிருக்கு! இனி நீங்க என்ன சொன்னாலும் நான் கேக்கறேன் உங்க மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு என ரஜினிகாந்த் கூறியதை ரஞ்சித் பேட்டி என்றில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *