• Sun. Oct 6th, 2024

டிடிவி தினகரன், நடிகர் செந்தில் மீதான வழக்கு ரத்து!

Byகாயத்ரி

Apr 9, 2022

கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை அடையாறில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் இல்லத்திற்கு முன்பு நடிகர் செந்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் திருச்சி தொகுதியின் எம்பி. குமார் குறித்து ஒருமையில் அவதூறாக பேசியதாக திருச்சி மத்திய குற்றப்பிரிவில் குமார் புகார் அளித்தார்.அதில் டிடிவி தினகரனின் தூண்டுதலின்பேரில் தான் நடிகர் செந்தில் தன்னை பற்றி அவதூறாக பேசினார் என்று தினகரன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனவும் கோரி இருந்தார்.

இதையடுத்து தினகரன் மற்றும் நடிகர் செந்தில் மீது திருச்சி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தினகரன் மற்றும் செந்தில் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திர முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறி வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி டி டி வி தினகரன் மற்றும் நடிகர் செந்தில் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *