• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு பரிசு என அறிவித்த அர்ஜுன் சம்பத் மீது வழக்கு

Byமதி

Nov 18, 2021

கடந்த 7ஆம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவில், “தேவர் அய்யாவை இழிவுபடுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ.1001/- வழங்கப்படும் என்று அர்ஜூன் சம்பத் அறிவித்துள்ளார். விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்கும் வரை அவரை உதைப்பவருக்கு 1 உதை = ரூ.1001/-” என்று தெரிவித்திருந்தது. மேலும், அவர் வெளியிட்ட இன்னொரு ட்விட்டர் பதிவில், “இதுவரை விஜய் சேதுபதி எந்த விளக்கமும் அளிக்காததால் விஜய் சேதுபதிக்கு இந்த எச்சரிக்கை..!!!!” என்று இந்து மக்கள் கட்சி எச்சரித்துள்ளது. இந்து மக்கள் கட்சியின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பதிவு அமைதி மீறுதலை தூண்டும் உட்கருத்துடனும், மிரட்டல் விடுத்ததாக உள்ளது எனக் கூறி 17ஆம தேதி, பி 1 கடைவீதி காவல்நிலைய குற்ற எண்- 633/2021, U/s 504 , 506 (i) IPC படி அர்ஜூன் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.