• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அமெரிக்க தியேட்டர்களைப் கைப்பற்றும் ‘அண்ணாத்த’

Byமதி

Oct 21, 2021

ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில் இப்படத்தின் டீசர், மூன்று பாடல்கள் வெளியாகி ரஜினி ரசிகர்களைத் சந்தோஷப்படுத்தியுள்ளது.

இதனிடையே, நவம்பர் 4ம் தேதி வெளியாகும் இப்படத்திற்காக அமெரிக்காவில் உள்ள தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. படத்தின் பிரிமீயர் காட்சியை அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதியே நடத்த உள்ளார்களாம். இதுவரை 50க்கும் மேற்பட்ட தியேட்டர்களை உறுதி செய்துள்ளனர்.

அமெரிக்காவில் மட்டும் 300 தியேட்டர்கள் வரை படத்தைத் திரையிட தியேட்டர்களைப் பிடித்து வருகிறார்களாம். சுமார் 22 மாதங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் படம் என்பதால் ‘அண்ணாத்த’ படத்திற்கு அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.