• Fri. Jul 31st, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

வெள்ளை மாளிகையில் இந்தியர்கள்…

Byமதி

Oct 21, 2021

வெள்ளை மாளிகையில் ஒரு வருட காலம் ‘பெலோஷிப்’ திட்டத்தின்கீழ் அதிகாரிகளாக பணியாற்றுவதற்கு 19 இளைய தலைமுறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 3 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். ஜாய் பாசு, சன்னி படேல் ஆகிய இருவரும் கலிபோர்னியா மாகாணத்தையும், ஆகாஷ் ஷா நியூஜெர்சி மாகாணத்தையும் சேர்ந்தவர்.

ஜாய் பாசு, வெள்ளை மாளிகை பாலின கொள்கை கவுன்சிலிலும், சன்னி படேல், உள்நாட்டு பாதுகாப்பு துறையிலும், ஆகாஷ் ஷா சுகாதாரம், மனித சேவைகள் துறையில் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.