• Sun. Jan 4th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

Byp Kumar

Feb 7, 2023

மதுரையில் துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தால் உயிரிழந்த மக்கள் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.
துருக்கியின் தென்கிழக்கு பகுதி சிரியா சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் துருக்கி முழுவதிலும் கடுமையாக உணரப்பட்டது.நிலநடுக்கத்தின் போது துருக்கியின் பல பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு சரிவது போல இடிந்து தரைமட்டமாகின. இதில் 1,500-க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை சுமார் 2000க்கும் அதிமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்நிலையில் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்த மக்கள் ஆத்மா சாந்தியடைய மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அருங்காட்சியக பொறுப்பாளர் நந்தா ராவ், மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாட்டில் பள்ளி மாணவ, மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.