• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர் சரவணக்குமார்..,

ByP.Thangapandi

Apr 6, 2026

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30 ஆம் தேதி துவங்கி இன்று நிறைவடைகிறது.

இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியா கூட்டணி சார்பில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சரவணக்குமார், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் படைசூள ஊர்வலமாக வந்து தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் உத்கர்ஷ்குமாரிடம் வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சரவணக்குமார், இன்று கூட்டணி கட்சிகளின் ஊர்வலத்தின் மூலமே எனது வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது., கூட்டணி கட்சிகளின் பலத்தோடு அமோக வெற்றியை பெறுவேன் என தெரிவித்தார்.