• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

வேட்பாளர் பிரிசில்லா பாண்டியன் தாமரைச் சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பு..,

ByRadhakrishnan Thangaraj

Apr 10, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனத் தலைவர்
ஜான் பாண்டியன் மனைவி பிரிசில்லா பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இவர் இராஜபாளையம் ஆண்டாள்புரம் ஆர் ஆர் நகர் பொன்னகரம் பாரதி நகர் விவேகானந்தர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கொட்டும் மழையிலும் பொது மக்களை சந்தித்து நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

இந்த பிரச்சாரத்தின் போது மாவட்ட அம்மா பேரவை செயலாளர் என் எம் கிருஷ்ணராஜ் இராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் பரமசிவம் வடக்கு நகர செயலாளர் முருகேசன் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் மாடசாமி கூட்டணி கட்சியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.