
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, வாய்புற்று நோயை ஆரம்பகாலத்திலேயே கண்டறிவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புகையிலை பயன்பாட்டின் உடல்நல பாதிப்புகளையும் அதன் தாக்கத்தையும் எடுத்துரைக்கும் பிரச்சாரத்தை அப்போலோ மருத்துவமனை முன்வைக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 77,000 புதிய வாய் புற்றுநோய் பாதிப்புகளும், $2,000 உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ், புகையிலை பயன்பாட்டினால் இந்தியாவில் அதிகரித்து வரும் வாய் புற்றுநோய் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் ஒரு சிறப்பு வாய் புற்றுநோய் பரிசோதனை திட்டத்தை தொடங்கியுள்ளது. உலகளவில் வாய் புற்றுநோயினால் பாதிக்கபடுவோரில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் இருக்கிறார்கள். இங்கு ஆண்டுதோறும் 77,000 புதிய பாதிப்புகளும், $2,000 இறப்புகளும் பதிவாகின்றன. அதே சமயம் தாமதமான நோய் கண்டறிதல் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாததால், உயிர் பிழைக்கும் விகிதம் 50%க்கும் குறைவாக உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் அப்போலோ மருத்துவமனை புகையிலை பயன்பாட்டின் உடல்நலக் கேட்டினை மட்டுமல்லாமல் அவர்கள் எதிர்கொள்ளும் நிதி பிரச்சினைகளையும் ஆராய்ந்து பார்க்கிறது. ஆய்வுகளின்படி, புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கூடுதலாக 11 லட்சம் மருத்துவ செலவுகள் ஏற்படுகின்றன. இது மருத்துவ காப்பீட்டுத் தொகையினை விட அதிகம்.
இந்த திட்டம் புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளை ஆரம்பகாலத்திலேயே கண்டறிந்து பரிசோதனை செய்து சிகிச்சை செய்ய ஏதுவாக வடிமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக புகையிலை மற்றும் மது அருந்துபவர்கள் HPV-16 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது வாய்வழி புண்கள் உள்ளவர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள நபர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இந்த முழுமையான வாய்வழி பரிசோதனையின் மூலம், மருத்துவர்கள் உதடு, நாக்கு தொண்டை வாயின் கீழ் தளம், மென்மையான மற்றும் கடின அண்ணம் கன்னத்தின் உள்பகுதி ஆகிய பகுதியில் உள்ள நாட்பட்ட புண்கள், வெள்ளைப் புள்ளிகள், சிவப்புத் திட்டுகள் அல்லது ஆறாத புண்கள் போன்ற ஆரம்பகால அறிகுறிகளை அவை தீவிரமடைவதற்கு முன்பே கண்டறிய முற்படுகிறார்கள்.
மதுரை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். டி.கே. சர்ப்பராஜன், டாக்டர் கே. பாலு மகேந்திரா மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஜி. சதீஷ் சீனிவாசன் ஆகியோர் கூறுகையில் “புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து 6 முதல் 7 மடங்கு அதிகம் வழக்கமான ஆரம்பகால கண்டறிதல் மற்றும் வாய் பரிசோதனைகள் மூலம் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்து உயிர்களை காப்பாற்ற முடியும் என்றனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் அப்போலோ மருத்துவமனைகள், மதுரை மண்டலத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர். நிகில் திவாரி, மருத்துவ சேவைகளின் இணை இயக்குனர் டாக்டர் K. பிரவீன் ராஜன், புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். T.K. சர்ப்பராஜன், டாக்டர். K. பாலு மகேந்திரா, கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஜி. சதீஷ் சீனிவாசன் காது மூக்கு தொண்டை மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். P.மீனா பிரியதர்ஷினி, டாக்டர்.G.அருண் பிரபு கணேசன் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் K. மணிகண்டன். நிர்வாக துணை பொது மேலாளர் லாவண்யா மற்றும் புற்றுநோயியல் ஒருங்கிணைப்பாளர் J. பிரேம் டேனியல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
