அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி, அப்பாவி பொதுமக்கள் வரை பலரின் உயிர் பரிதாபமாக பறிபோய் வருவது தொடர் சம்பவங்களாக உள்ளது. நேற்று கூட திங்கட்கிழமை தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள், அதுவும் கோவில்பட்டியில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்த கொலைகள் நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தால் நெஞ்சம் பதறுகிறது.

இந்த லட்சணத்தில் திராவிட மாடல் அரசு எடுத்த உறுதியான நடவடிக்கையால், 5 மாதங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது என்று திமுக அரசு மார்தட்டுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான தம்பதிகள் படுகொலை செய்யப்பட்டு நகைகள், கொள்ளை அடிக்கப்பட்டு குற்ற சம்பவத்திலே கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகள் விசாரணையின் போது கடந்த பல ஆண்டுகளாக ஆங்காங்கே நடைபெற்ற 12 குற்ற சம்பவங்கள் ஈடுபட்டதாகவும், அதில் 19 பேரை கொல்லப்பட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அவர்கள் ஒப்புக்கொண்ட 12 குற்ற சம்பவங்களில் ஒரு சில வழக்குகளில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு பதில் அவசரகதியில் வழக்குகளை முடிக்க வேண்டும் என்று சம்பந்தமே இல்லாத குற்றவாளிகளை கைது செய்து தற்போது அவர்கள் சிறையில் உள்ளனர். இந்நிலையில் போலி குற்றவாளிகள் மறு விசாரணையில் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன என்று இந்த விடியா திமுக மாடல் அரசை கண்டித்து கழக பொதுச் எடப்பாடியார் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளார் ஆனால் ஸ்டாலினுக்கு இதைக்கண்டு பொறுத்துக் கொள்ள முடியவில்லை
மக்களே சிந்தித்துப் பாருங்கள் அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கு முதல், அரக்கோணம் பாலியல் வழக்கு வரை திமுக அரசு எந்த லட்சணத்தில் பெண்களுக்கு எதிரான வழக்குகளை கையாண்டு வருகிறது என்பதை நாடு அறியும்.தெய்வசெயல் போன்ற பாலியல் கயவர்களையும் பல சார்களையும் காத்து நிற்பது இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு தான்.
தமிழகத்தில் மிகச்சிறிய மாவட்டமான செங்கல்பட்டில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகள் சுமார் 717 பாலியல் வழக்குகள் நீதிக்காக காத்திருக்கின்றன என்றும், இதில் மகளிர் காவல் நிலையங்களில் சுமார் 270 வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ஆய்வு முடிந்தும் தேக்கத்தில் உள்ளது என்றும், மற்றும் பல வழக்குகள் பல்வேறு நிலைகளில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன
உங்கள் ஆட்சி திறமை எங்கே? விடியா மாடல் அரசு மேலே குறிப்பிட்டுள்ள ஒரு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு போல் குறைந்த காலத்தில் நீதி வாங்கி தர தயாரா?
இல்லாத சாரை யாரும் உருவாக்கவில்லை, எப்.ஐ .ஆரில் உள்ள அந்த சார் என்று தான் கேட்கிறோம், மாறாக அந்த சாரை காப்பாற்றும் இழிப்பிறவியாக இருப்பது ஸ்டாலின் சார் தலைமையிலான திமுக சார்கள் தான். கழகப் பொதுச்செயளாலர் எடப்பாடியார் வலுவாக இந்த வழக்கில் அழுத்தம் கொடுத்த காரணத்தால் தான் இந்த வழக்கில் இந்த நீதி கொடுத்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது நீங்கள் மறந்துவிட வேண்டாம் .
2026 மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையும், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு முதல் தமிழகத்தில் அனைத்து கொலை ,கொள்ளை, பாலியல் வழக்குகளும் மீண்டும் விசாரணை செய்யப்பட்டு குற்றம் செய்த அனைத்து சார்களுக்கும் சட்டத்தின் முன் தண்டனை பெற்றுத் தரப்படும்
என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
அரைமணி நேரம் இடைவெளியில் கொலைகள் என தமிழ்நாடு பதட்டத்திலே இருக்கிறது ஆகவே இருந்த பதட்டத்தை தணிப்பதற்கு, இந்த அவல நிலையை மாற்றுவதற்கு ஒரே வழி தான் நமக்கு இருக்கிறது விரைவில் எடப்பாடியார் அம்மா ஆட்சி அமைய வேண்டும்.
இன்றைக்கு கொலை, கொள்ளை, பாலியல் என சட்ட ஒழுங்கு என்றால் என்ன விலை என்று கேட்கும் ஸ்டாலின் திமுக மாடல் அரசுக்கு தகுந்த பாடத்தை மக்கள் வழங்க வேண்டும் என கூறினார்.