• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்கலாமா! உச்சநீதிமன்றம்

தேர்தல் நேரங்களில் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயம். அதில் விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.பா.ஜ.,வை சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில் கூறியதாவது: தேர்தல் விதிகளை மீறி பொது மக்களின் பணம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.

பொது மக்களின் பணம் மூலம், இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளிப்பது, வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும், இது நேர்மையான சுதந்திரமான தேர்தல் என்ற அடித்தளத்தை அசைப்பதுடன், தேர்தல் செயல்முறையின் தூய்மையை கெடுப்பதுடன் சமநிலையை சீர்குலைக்கிறது. தேர்தலை கொண்டு இலவசங்களை அறிவிப்பது, ஜனநாயகம் புத்துயிர் பெறுவதற்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளதுடன், அரசியல்சாசனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்பதற்காக, தேர்தல் நேரத்தில் அரசின் கஜானாவில் இருந்து இலவசங்களை அறிவிப்பது முறையற்ற நடவடிக்கை. பொதுமக்களின் பணத்தில் இருந்து இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதுடன் தேர்தல் சின்னங்களை முடக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி என்வி ரமணா, ஏஎஸ் போபண்ணா, ஹிமோ கோலி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது: குறைந்த நம்பிக்கையுடன், பல்வேறு விவகாரங்களில் விதிமுறைகளை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கிறோம்.

நீதிமன்றத்தின் உத்தரவிற்கு பிறகு ஒரு முறை ஆலோசனை நடத்தும் தேர்தல் ஆணையம், பின்னர் அரசியல் கட்சிகளின் கருத்தை கேட்கிறது. அதற்கு பிறகு என்ன நடக்கிறது என எங்களுக்கு தெரியவில்லை. இலவசங்களுக்கான பட்ஜெட், வழக்கமான பட்ஜெட்டை விட அதிகமாக செல்கிறது. எனவே இலவசங்கள் என்பது முக்கியமான விஷயம். அரசியல் கட்சிகள் இலவசங்களை விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக மத்திய அரசு, தேர்தல் ஆணையம் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.