• Fri. Apr 26th, 2024

மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மலர்தூவி மரியாதை!

மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களுக்கு
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தாய்மொழி தமிழ் மொழி காக்க, இந்தியை எதிர்த்து 1938 – 1965 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் உயிரிழந்த தியாகிகள் வீரவணக்கம் நாள் ஜனவரி 25-ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.இந்த ஆண்டும் நேற்று மொழிப்போர் தியாகிநாள் தமிழர்கள் வாழும் பகுதிகளிளெல்லாம் கடைபிடிக்கப்பட்டது.

அஇஅதிமுக சார்பாக மாணவரணி சார்பாக ஆண்டுதோறும் ஜன.25-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் வீர வணக்கநாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுவதுடன், மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவதும் வழக்கமாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பொதுக்கூட்டம் இன்றி விரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி மட்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் விருதுநகர் மேற்கு மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.எஸ்.கதிரவன் தலைமை வகித்தார். ; மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களுக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளரும் சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் கலாநிதி, திருத்தங்கல் நகரக் கழகச் செயலாளர் பொன்சக்திவேல், சிவகாசி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆரோக்கியராஜ், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வெங்கடேஷ், சிவகாசி நகர செயலாளர் அசன்பதூரூதீன், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் சீனிவாசபெருமாள், விருதுநகர் மேற்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்தையா, மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் முத்துராஜ், விருதுநகர் மாவட்ட மாணவரணி இளை செயலாளர் முத்துராஜ், மாவட்ட மாணவரணி துணை செயலாளர்கள் எம்.திருப்பதிராஜ், எஸ்.தங்கராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம், திருத்தங்கல் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சரவணக்குமார், சிவகாசி ஒன்றிய இளைஞரணி செயலாளர் கே.டி.சங்கர், சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக், சிவகாசி கிழக்கு இலக்கிய அணி செயலாளர் மாரிக்கனி, சிவகாசி நகர மாணவரணி செயலாளர் கரைமுருகன், திருத்தங்கல் நகர மாணவரணி செயலாளர் ஹரிஹரசுதன், சிவகாசி வடக்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் சத்தியராஜ் சிவகாசி கிழக்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் வசந்தகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *