• Fri. Apr 19th, 2024

2026இல் இந்திய பெரும் பணக்காரர் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிக்கும்

ByA.Tamilselvan

Sep 23, 2022

இந்தியாவில் தற்போதுள்ள பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை, 2026-ஆம் ஆண்டில், அப்படியே 2 மடங்காக அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட முதலீட்டு வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமான ‘கிரெடிட் சூயிஸ்’ (Credit Suisse) உலக சொத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2021 ஆம் ஆண்டில், இந்தியா வில் 7 லட்சத்து 96 ஆயிரம் பேர்களாக இருந்த பெரும்பணக்காரர்கள் (சுமார் 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டவர்கள்) எண்ணிக்கை, 2026-ஆம் ஆண்டில் 105 சதவிகிதம் அதிகரித்து 16.23 லட்சமாக இருக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. 2000-ஆவது ஆண்டிலிருந்து இந்தியா வில் வயது வந்தோருக்கான சொத்து மதிப்பு 8.8 சதவிகித சராசரி ஆண்டு விகிதத்தில் உயர்ந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக அளவில் 1 மில்லியன் டாலருக்கு மேல் (சுமார் 8 கோடி ரூபாய் அதிகமாக) சொத்து மதிப்பைக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6 கோடியே 25 லட்சமாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2026-ஆம் ஆண்டில் 8 கோடியே 75 லட்சமாக உயரும். 1 கோடிக்கும் அதிகமான புதிய கோடீஸ்வரர்களாக உருவாவார்கள்.
உலகப் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அடிப்படையிலான தரவரிசையில், தற்போது, அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. சீனா தற்போது 2-ஆவது இடத்தில் உள்ளது. இப்போதும் உலகின் 82 சதவிகித சொத்துக்கள், வெறும் 10 பணக்காரர்கள் வசமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *