• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு வி.சாலை விக்கிரவாண்டியில் நடைபெற்று வருகின்றது. தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாட்டில் அனைவரையும் வரவேற்று பேசினார்.

மாநாட்டை நடத்தவும் வரலாற்றை சிறப்புமிக்க மாநாட்டை இன்று தலைமை ஏற்று நடத்திக் கொண்டே இருக்கின்றீர்கள் எங்கள் தலைவரே! உங்களை வருக, வருக என வரவேற்பது பெருமை கொள்கிறோம். மாநாட்டுக்கு வருகை தந்திருக்கும் தாய் தந்தையர் இருவரையும் கூப்பி வணங்கி வருக, வருக வரவேற்கிறோம். எங்களையும் எப்போதும் ஆசீர்வதிக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றியும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். தொண்டர்கள் அனைவரையும் வருக, வருக என வரவேற்கிறோம். சகோதரர் வெங்கட்ராமன் அவர்களையும் வருக, வருக என வரவேற்கிறோம். மதிப்பிற்குரிய சகோதர ராஜசேகர் அவர்களையும் கழகத்தின் கொள்கை பரப்பு துணைச்செயலாளர் மதிப்பிற்குரிய சகோதரி ஷாகிரா-வை வருக என வரவேற்கிறோம். தற்காலிக சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர், நகர பேரூர் கிளை தொகுதி பகுதி கழக முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் வருக, வருக என வரவேற்கிறோம். பத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்களையும் வருக, வருக என வரவேற்பு மகிழ்ச்சி அடைகிறோம். தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு நிலங்களை கொடுத்த நில உரிமையாளர்கள் அனைவரையும் வருக, வருக என வரவேற்கிறோம். நம் தலைவரின் தோழர்களான நமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம். தொலைக்காட்சிகளில் சமூக ஊடகங்களிலும் நமது மாநாட்டை ஆர்வமுடன் தமிழகம், புதுச்சேரி மக்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மக்களுக்கும் மற்றும் உலகமெங்கும் இருக்கும் தமிழ் மக்களையும் வரவேற்கிறேன். வணக்கம் தெரிவித்துக் கொள்கிறோம் மாநாட்டின் இறுதியாக நன்றியுரை ஆற்ற இருக்கும் சகோதரர் பரணி பாலாஜி அவர்களையும் வருக வருக என வரவேற்கிறோம். உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை இரு கை கூப்பி வரவேற்கிறேன். வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு என் வாழ்நாள் முழுக்க தளபதி அவர்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன் நன்றி வணக்கம் என்று வரவேற்பு உரையை முடித்துக் கொண்டார்.