காளையார்கோவிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்க கோரி வணிகர் சங்கம் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் எம்எல்ஏ செந்தில்நாதன் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் மேலும் காளையார்கோவிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்க கோரி தமிழக அரசை வலியுறுத்தி காளையார்கோவில் வணிகர் சங்கம் சார்பாக, நடைபெற்ற மாபெரும் கையெழுத்து இயக்கத்தில் சிவகங்கை அதிமுக மாவட்ட கழக செயலாளர், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் PR.செந்தில்நாதன் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.