மலையாளத்தில் வெற்றிபெற்ற ”தி கிரேட் இந்தியன் கிச்சன் ” படத்தைத் தமிழில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்.தமிழிலும் அதே பெயரில் வெளியாக உள்ளது
ஒரு பெண் படித்துப் பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்குப் பிறகு நனவாக்குகிறாளா ? திருமணத்துக்குப் பிறகு அவளது வாழ்க்கை எப்படியிருக்கிறது? கணவனும் புகுந்தவீட்டாரும் அவளை எப்படி நடத்துகிறார்கள்? என்பதே இப்படத்தின் கதை.
ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்திருக்கிறார்.இவரது ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடித்திருக்கிறார்.பாலசுப்ரமணியெம்ஒளிப்பதிவுசெய்திருக்கிறார்.ஜெர்ரிவின்செண்ட் இசையமைத்திருக்கிறார்.
இந்தப்படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து முழுமையாகத் தயாராகிவிட்டது.
இந்நிலையில் இப்படத்தை மொத்தமாக வாங்கி வெளியிட முன்வந்திருக்கிறார் துர்காராம் செளத்ரி எனும் புதியவர்.ஆர்டிசி மீடியா பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை வெளியிடுகிறார்.தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியின் உறவினரான இவர் இந்தப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்குள் நுழைகிறார்.இந்தப்படத்தை மூன்றரை கோடி கொடுத்து வாங்கியிருக்கிறாராம் துர்காராம் செளத்ரி. தொடர்ந்து தமிழ்ப்படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்கிறார்கள்.