• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

பேருந்தும் பால் வண்டியும் மோதி விபத்து; மூவர் பலி..,

ByG.Suresh

May 6, 2025

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை தேனாற்று பாலம் அருகே திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு பேருந்தும் தேவகோட்டையில் இருந்து காரைக்குடியை நோக்கி வந்த தனியார் பால் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் பால் வாகனத்தில் பயணித்த ஆறுமுகம்,கருணா தமிழ்பாண்டியன் ஆகிய மூவரும் சம்பவ இடத்தில் பலி.

பால் வாகனத்தை ஓட்டி வந்த ரூபன் , அரசு பேருந்து ஓட்டுனர் நாகராஜ் நடத்துனர் செல்வேந்திர பிரசாத் ஆகியோர் ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் பயணித்த பயணிகள் 10க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில்,காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் நான்கு பேர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதிகாலை மூன்று மணி அளவில் நடந்த இச்சம்பவம் காரைக்குடி பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.