• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பம்பர் திரை விமர்சனம்

Byஜெ.துரை

Jul 6, 2023

வேதா பிக்சர்ஸ் சார்பாக தியாகராஜன், ஆனந்தஜோதி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் செல்வகுமார் இயக்கத்தில் வெற்றி, ஹரீஷ் பேரடி, ஷிவானி நாராயணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ பம்பர்”

பணத்திற்காக திருட்டு, வழிப்பறி போன்ற தவறான செயல்களை நண்பர்களுடன் சேர்ந்து செய்து வருகிறார் வெற்றி.

வெற்றியின் மாமன் மகளாகிய ஷிவானி நாராயணன் அவனது தவறான செயலால் அவனை நேசிக்க மறுக்கிறார் ஆனால் வெற்றியின் தாயார் ஷிவானியை திருமணம் முடித்து வைத்தால் வெற்றி திருந்தி விடுவான் ஷிவானியிடம் கூறுகிறார்.

இந்நிலையில் வெற்றிக்கு காவல்துறையினர் மூலம் ஒரு கொலை செய்ய சொல்லி அழைப்பு வருகிறது.

பணத்திற்காக வெற்றியும் அவனது நண்பர்களும் ஒத்துக் கொள்கிறார்கள்
ஆனால் பிரச்சனை வேறு வழி செல்ல வலுக்கட்டாயமாக சபரிமலைக்கு மாலைப் போடும் சூழ்நிலை வருகிறது.

தங்களை காப்பாற்றி கொள்ள கேரளா செல்லும் வெற்றி லாட்டரி விற்கும் ஹரீஷ் பேரடியை சந்திக்க நேர்கிறது.

அதன்பின் அவரின் வற்புறுத்தலின் பேரில் லாட்டரியை ஒன்றை வாங்குகிறார் அந்த லாட்டரி பம்பர் அடிக்க பம்பர் அடித்த விஷயம் இவருக்கே தெரியமால் போக ஒரு கட்டத்தில் பம்பர் அடித்த லாட்டரி வெற்றியிடமே வந்து சேர்கிறது உடனே அந்த பணத்தை வாங்க கேரளா செல்கிறார் பணம் கிடைத்ததா? லாட்டரி பணத்த பெற அவர் சந்தித்த இன்னல்கள் என்ன? இது தான் பம்பர் படத்தின் கதை

ஹரீஷ் பேரடியின் நடிப்பு அபாரம் இதுவரை வில்லனாகவே பார்த்து வந்த இவரை சாதுவான கதாப்பாத்திரத்தில் பார்ப்பது அனைவரயும் வியக்க தக்க அமைந்துள்ளது.

வெற்றியின் இயல்பான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

வெற்றியின் தாயாக ஆதிராவின் நடிப்பு அருமை நாயகி ஷிவானி நடிப்பு பாரட்ட தக்கது.

காவல்துறை அதிகாரிகள் கவிதா பாரதி,அருவி மதன் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல சிறப்பாக அசத்தியுள்ளனர்.

GP முத்து பழைய ஜோக் தங்கதுரை மற்றும் நண்பர்களின் காமெடி நல்ல சிறப்பு.

இசை கோவிந்த் வசந்தா பாடல்கள் அனைத்தும் டாப் டக்கர் கார்த்திக் நேத்தா பாடல் வரிகள் மிக இனிமை.

பின்னணி இசை கிருஷ்ணா மசாலா கஃபே மிக சிறப்பு.

வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு அருமை அதிலும் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் கேரளா பகுதியை இவரது கேமரா அழகாக பதிவு செய்துள்ளது.

படத்தொகுப்பு – கலை இயக்கம் மிக அருமை
சண்டைக்காட்சி மற்றும் நடனம் அற்புதம்

கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம் அறிமுக இயக்குநர் என்றாலும் இயக்கியுள்ளார் செல்வகுமார்

மொத்தத்தில் பம்பர் திரைப்படம் மதங்களை கடந்து மனித நேயத்தை நெல்லை மொழியில் அசத்திய பொழுதுபோக்கு படம்.