• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

அண்ணன் ஸ்டாலினுக்கு விளம்பர மோகம் அதிகரித்து….

ByR.Arunprasanth

May 4, 2025

முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு எதற்கு பாராட்டு விழா இது ஒரு விளம்பர அரசாகவே உள்ளது.

தமிழக அரசு அடிப்படையாக மக்களுக்கு பணி புரியும் அரசு பணியாளர்களை தண்டிக்கிறது. சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி,

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருந்த ஜேபி நட்டாவை வழியனுப்புவதற்காக சென்னை விமான நிலையம் வந்திருந்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்:-

பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா தமிழகத்திற்கு வந்தது எங்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி விளம்பர ஆட்சி அதனால் எங்களுக்கு 2026 எளிதாக வெற்றி கிடைக்கும்.

ஏற்கனவே தமிழக முதலமைச்சருக்கு ஒரு பாராட்டு விழா நடைபெற்று விட்டது. இப்பொழுது எதற்கு இன்னொரு பாராட்டு விழா அதிலும் மாநில சுயாட்சி நாயகன் என போட்டு கொள்கிறார்கள். தினம் ஒரு பாராட்டு விழா வைத்து மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்கள் வெந்து கொண்டிருக்கிறார்கள்..

மருத்துவம் கல்வி போக்குவரத்து போன்ற துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்பாமல் உள்ளது அதிகாரிகள் தவறு செய்கிறார்கள் என உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது. இதனால் தமிழக முதலமைச்சர் அரசாங்கத்தின் மீதும் மக்களின் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்..

தமிழக அரசு செவிலியர்கள் அங்கன்வாடி ஊழியர்கள் மருத்துவர்கள் காவல்துறை அதிகாரிகள் போன்று அடிப்படையாக மக்களுக்கு சேவை செய்யும் அரசு பணியாளர்களை தான் தண்டிக்கிறார்கள்.

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தினம் ஒரு பாராட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஆக போகிறது. ஆனால் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை சாமானியர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. ஆதீனங்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இப்படித்தான் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் இருக்கிறது. வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் மீது வைக்கும் அக்கறையை இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மீது தமிழக அரசு வைக்கவில்லை என்பதை நான் குற்றச்சாட்டாக வைக்கிறேன்.

பத்திரிகை சுதந்திரம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மீனாட்சியம்மன் கோவில் கொடியேற்ற விழாவிற்கு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டுமென்றால் 20 ஆயிரம் ரூபாய் கேட்டதாக தகவல்கள் வருகிறது. இந்து கோயில்களில் நடக்கும் விழாக்கள் மக்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக இதுபோன்ற கெடுபிடிகளை தமிழக அரசு மேற்கொள்கிறது.

ஆளுநரை ரப்பர் ஸ்டாண்ட் போஸ்ட்மேன் எனக் கூறும் இன்றைய ஆட்சியாளர்கள் தான் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது தினம் ஒருமுறை சென்று அவரைப் பார்த்தார்கள். அரசியலமைப்பு சட்டத்தை கேள்விக்குறியாக்க கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து எந்த இடத்திலும் பிரதம மந்திரி குடியரசு தலைவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை கொடுக்கப்படுகிறது. ஆளுநருக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.

பாஜகவும் திமுகவை கடுமையாக எதிர்க்கிறது தம்பி விஜய் அவர்களும் கடுமையாக எதிர்க்கிறார். இதனால் எப்பொழுது அதிமுக பாஜக கூட்டணி அமைந்ததோ அப்பொழுதிலிருந்து திமுகவினர் பதட்டத்தில் இருக்கிறார்கள்.

மேலும் திமுகவை எதிர்ப்பதை விஜய் கடுமையாக்க வேண்டும் பி டீம் ஏ டீம் என எது வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும்.