• Fri. Apr 26th, 2024

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செப்-15ஆம் தேதி முதல் காலை சிற்றுண்டி திட்டம்..

Byகாயத்ரி

Sep 7, 2022

அரசுப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்ககல்வி மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். முதற்கட்டமாக 15 மாவட்ட அரசு பள்ளிகளில் 292 கிராம பஞ்சாயத்துகளில் பரிசுத்தமான முறையில் திட்டம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டமானது அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின், திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்தது. இதற்கான அரசாணை கடந்த மாதம் வெளியான நிலையில் காலை 5:30 – 7:45 மணிக்குள் சமையல் பணியை முடிக்கவும், காலை 8:15-8:45 மணிக்குள் உணவை குழந்தைகளுக்கு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி மதுரையில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் முதற்கட்டமாக 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப் பகுதிகளில் செயல்படும் 1545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்கப்பள்ளி (1 முதல் 5 வகுப்பு வரை) குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை 2022-2023 ஆம் ஆண்டில் முதற்கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *