

கன்னியாகுமரி அருகே உள்ள பெருமாள் புரத்தில் இலங்கை இடம் பெயர். தமிழர்களுக்கு புத்தம் புதிய வீடுகள் 172 இலங்கை தமிழர்களுக்கு அமைச்சர்கள்
தங்கம் தென்னரசு, நாசர் புதிய வீட்டின் சாவியை வழங்கினார்கள்.
இலங்கை அரசு தமிழர்களை இரண்டாம் குடி மக்களாக பாவித்த நிலையில், இலங்கையில் தமிழர்களின் உரிமை வேண்டி நடந்த உள்நாட்டுப் போரால், போராட்டம் காரணமாக, இலங்கை சிங்கள அரசின் கடுமையான அடக்குமுறை காரணமாக இலங்கையில் இருந்து தமிழர்கள் குடும்பம், குடும்பமாக வெளியேறிய தமிழர்கள் தோணி மற்றும் படகுகளில் ராமேஸ்வரம் வந்தவர்களை முதலில் ராமேஸ்வரம் முகாமில் தங்க வைக்கப்பட்டு, பின்னர் தமிழகத்தில் வேறு, வேறு மாவட்டங்களில் தமிழக அரசு இலங்கை புலம் பெயர்ந்த தமிழர்கள் முகாம் அமைக்கப்பட்டு அங்கு இலங்கை தமிழர்கள் தங்க வைக்கப்பட்ட வகையில், குமரி மாவட்டத்தில் நான்கு முகாங்கள் அமைக்கப்பட்டதில் ஒன்று கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரம் முகாமும் ஒன்று.


பெருமாள் புரம் முகாமில் 1990_ம் ஆண்டு 188_ குடும்பங்களை சேர்ந்த 534 பேர் தற்காலிக வீடுகள் கட்டி தங்க வைக்கப்பட்டனர்.


நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, நாசர், மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், கிள்ளியூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ் குமார் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி.ஸ்டீபன் ஆகியோர் பங்கேற்றனர்.



பெருமாள்புரம் முகாமில் 1990_ ஆண்டுகளில் குடி அமர்த்தப்பட்டு 35_ஆண்டுகளுக்கு பின், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆசோசனையின் அடிப்படையில் முதல் கட்டமாக ரூ.11 கோடியே 54_ லட்சத்து 44_ ஆயிரம் ரூபாயில் புதிதாக 172 வீடுகள் முழுமையாக பணிகள் தீர்ந்த வீடுகளின் வீட்டு சாவியை , இலங்கை தமிழ் குடும்பத்தாருக்கு தனி, தனியாக.அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, நாசர், குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், குமரி ஆட்சியர் அழகு மீனா முன்னிலையில் வழங்கினார்கள்.


இனியும் வீடு கிடைக்காத புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு புதிதாக 90 வீடுகள் கட்ட ரூ.7.55 கோடியை தமிழக அரசு ஒதுக்கியதின் அடிப்படையில் புதிய வீடுகளுக்கான அடிக்கல்லை இரண்டு அமைச்சர்கள், இரண்டு மக்கள் பிரதிநிதிகளான மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், அமைச்சர் அழகு மீனா ஆகியோர் இணைந்து புதிய வீடுகளுக்கான அடிக்கல்லை நாட்டினார்கள்.

