
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வந்தன.
இந்நிலையில் விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார். இதற்கு பா.ஜனதா உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விடுத்த கோரிக்கையை அவை தலைவர் நிராகரித்தார். இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து அமளியில் ஈடு பட்டனர். இதனால் அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் முழுக்கம் காரணமாக பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.