

தி லெஜண்ட் சரவணன் கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து தன்னுடைய சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடிக்க துவங்கினார். அதை தொடர்ந்து தி லெஜண்ட் எனும் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாகவும் அறிவித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தி லெஜண்ட் திரைப்படம் கடந்த ஜுலை 28ஆம் தேதி வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபிசில் மட்டுமே இதுவரை சுமார் ரூ. 7.7 கோடி வரை வசூல் எட்டியுள்ளது.
இந்நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் தி லெஜண்ட் சரவணனை தொடர்ந்து பிரபல நகைக்கடை உரிமையாளர் கிரண் குமாரும் விரைவில் ஹீரோவாக நடிக்கவரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பதிலளித்த கிரண் குமார், அப்படி எந்த ஒரு எண்ணமும் இல்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார். கிரண் குமார் தனது நகைக்கடை விளம்பரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

