• Fri. Jan 24th, 2025

வெடிகுண்டு வெடிக்கும் …. அண்ணா பல்கலைக் கழகத்திற்கு மிரட்டல்!

ByIyamadurai

Jan 4, 2025

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது. இந்த நிலையில் மின்னஞ்சல் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். பல்கலைக்கழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.