பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை(ஜனவரி 5) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தொடர் விடுமுறை இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் தங்கி இருப்பவர்களும், கல்வி பயில வந்திருக்கும் மாணவர்களும் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதன் காரணமாக, ரயில்களில் கூட்டம் அலைமோதும். இந்த நெரிசலை குறைப்பதற்காக, தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அந்த வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தென்மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதுகுறித்த விவரம்வருமாறு; தாம்பரம்-கன்னியாகுமரி இடையே (வண்டி எண்-06093) வருகிற 13-ம் தேதி 20 பெட்டிகளைக் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில், தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், தஞ்சாவூர், அருப்புக்கோட்டை, நெல்லை வழியாக மறுநாள் பகல் 12.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். தாம்பரம்-கன்னியாகுமரி இடையே (வண்டி எண்-06093) வருகிற 13-ம் தேதி 20 பெட்டிகளைக் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில், தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், தஞ்சாவூர், அருப்புக்கோட்டை, நெல்லை வழியாக மறுநாள் பகல் 12.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
மறுமார்க்கமாக, கன்னியாகுமரி-தாம்பரம் இடையே (வண்டி எண்-06094) வருகிற 14-ம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில், கன்னியாகுமரியில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஜன.12, 19, 26 ஆகிய தேதிகளில் நெல்லையிலிருந்து நண்பகல் 03.30 மணிக்கு புறப்படும் ரயில், (06092) மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
ராமநாதபுரத்தில் இருந்து 10,12,17 ஆகிய தேதிகளில் நண்பகல் 03.30 மணிக்கு புறப்படும் ரயில், (06104) தாம்பரத்துக்கு அதிகாலை 3.30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக 11,13,18 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில், காலை 5.30 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும். இந்த ரயில், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் வழியாக தாம்பரம் சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.