பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தேனி ராணுவ வீரர் யோகேஷ் குமார் உடல் டெல்லியில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.
பஞ்சாப் மாநிலம் பத்தின்டா ராணுவ முகாமில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர்.அதில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் யோகேஷ்குமார் (வயது 23) இவரது உடல் இன்று காலை 8 மணிக்கு டெல்லி விமானத்தில் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட உள்ளது.பிறந்த ராணுவ வீரர் யோகேஷ் குமாரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றப்பட்டு தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.