• Fri. Apr 19th, 2024

பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்திய திமுக பிரமுக பெண்மணி

Byஜெ.துரை

Apr 14, 2023

சென்னை விருகம்பாக்கம் தொகுதி எம். ஜி.ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள தங்கவேல் நகரில் வசிக்கும் பொதுமக்களை திமுக பகுதி துணை செயலாளர் கனிமொழி தனசேகரன் என்பவர் அவரது ஆதரவாளர்களுடன் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் மற்றும் பொதுமக்களை கத்தி, மற்றும் அரிவாள் கொண்டு கொலை மிரட்டல் விடுத்தும் கட்டையால் கடுமையாகவும் தாக்கியுள்ளார்.
திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் 137 வர்டு கவுன்சிலருமான க.தனசேகர் என்பவரது மகள் கனிமொழி தனசேகர் திமுக பகுதி துணை செயலாளராக இருந்து வருகிறார்,இவருக்கு ஏ.கே.கல்வி அறக்கட்டளை மகளிர் மேம்பாட்டு சுயநிதி உதவி குழு என்ற தனியார் அறக்கட்டளையின் பொறுப்பாளராகவும் செயல் பட்டு வருகிறார்.
இந்த அறக்கட்டளைக்கு அப் பகுதியிலுள்ள பொதுமக்களை உறுப்பினராக இணைய வற்புறுத்தியுள்ளார்.


உறுப்பினராக இணைய தங்களது ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலை கொடுத்து டோக்கன் பெற்று கொண்டு தான் சொல்லும் தேதியில் இலவசமாக ஹாட் பாக்ஸ் பெற்று கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார்.
அடையாள சான்றிதழ் தர அப்பகுதி வாசிகள் மறுத்துள்ளனர் இதனால் ஆவேசமடைந்த தனசேகரன் மகள் கனிமொழி எனது தகப்பனார் திமுக கவுன்சிலர் நான் திமுக பகுதி துணைச் செயலாளர் நான் பொறுப்பாளராக இருக்கும் மகளிர் குழுவில் நீங்கள் உறுப்பினராக இணைய வேண்டும் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அது மட்டுமின்றி அவரது ஆதரவாளர்களான 127 வது திமுக வட்ட செயலாளர் சதிஸ் கண்ணன், 138 வது திமுக வட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சுமார் 50க்கு மேற்பட்ட திமுகவினர் சூழ்ந்து பெண்கள் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் கடுமையாக தாக்கியுள்ளனர். உயிருக்கு பயந்த பொதுமக்கள் அவசர உதவி காவல் எண் 100க்கு அழைத்துள்ளனர் அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகர் (ஆர்-10) காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் வந்த நிலையில் அவரும் தாக்க பட்டு உள்ளார். பாதுகாப்பு கருதி காவல் நிலையம் சென்று அப்பகுதி வாசிகள் புகார் கொடுத்துள்ளனர்.
விசாரித்த எம்ஜிஆர் நகர்(ஆர்-10) காவல் துறையினர் திமுக ஆளும்கட்சி பிரமுகர் மகள் என்று தெரிந்த உடன் கண்துடைப்புக்கு பெற்று கொண்ட புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையோ வழக்கோ அவர்கள் மீது பதியப்படவில்லை.
இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் விரைந்து நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *