
பழனி நகராட்சி அண்ணாமலை மருத்துவமனையில் பழனி நகராட்சி, நகராட்சி சுகாதார மையம், சேம்பர் ஆப் காமர்ஸ் இணைந்து இரத்ததான முகாம் மற்றும் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு முகாம் நடத்தியது.

நகராட்சி நகர் நல அலுவலர் மனோஜ் குமார் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சேம்பர் ஆப் காமர்ஸ் உறுப்பினர்கள், அரிமா சங்க உறுப்பினர்கள்
, நகராட்சி அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ரத்ததானம் கொடுப்பதன் அவசியம், இறந்தபின் உடல்களை தானம் வழங்குவதன் பயன் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். இரத்ததானம் வாங்கியவர்களுக்கு முட்டை, பழங்கள், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. ரத்த தானம் கொடுத்ததற்கான பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. பலரும் கலந்து கொண்டு தங்கள் ரத்த வகையை அறிந்து கொண்டனர்.

