• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பாஜக பெண் செயற்குழு உறுப்பினர் கைது!!

ByA.Tamilselvan

Jul 10, 2022

சமூக வலைத்தள பக்கத்தில் மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் பதிவிட்டதாக பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாடு பாஜகவின் செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் சவுதாமணி தனது ட்விட்டர் பக்கத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரது இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
மதக்கலவரத்தை தூண்டும் வீடியோவை பகிர்ந்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து, அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை தொடர்ந்து சவுதாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். எனினும் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், சென்னை சூளைமேட்டில் உள்ள சவுதாமணி வீட்டில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சவுதாமணியை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.