

உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் வகையில், மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை அருகில் பாஜக கட்சி மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் முன்னிலையில், வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ‘தற்போது பிற மாநிலங்களில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது போல 2024ம் ஆண்டு இந்தியா முழுவதும் பாஜக ஆட்சி செய்யும், 2026ம் ஆண்டு தமிழகத்தை ஆட்சி செய்யும். மதுரையில் உள்ள எம்பி சு.வெங்கடேசன் பேஸ்புக், டுவிட்டரில் மட்டும் அரசியல் செய்கிறார். அவரை நேராக நிறுத்தினால் மக்கள் யாருக்கும் அடையாளம் தெரியாது. மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி மக்களுக்கு கொண்டு செல்லும் அரசாக செயல்படுகிறது. பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டத்தை இவர் வழங்குவது போல மகளிர் தின விழா அன்று அறிவிக்கின்றார்’ என கூறினார்.

