• Fri. Mar 29th, 2024

அரசியலை சுத்தப்படுத்த போகிறோம்…ஆம் ஆத்மி…

Byகாயத்ரி

Mar 13, 2022

டெல்லியில் மட்டுமே இருந்து வந்த ஆம் ஆத்மி அரசு இப்போது பஞ்சாபிலும் அமைந்திருக்கிறது. பல்வேறு காரணங்களுடன் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தங்களது பஞ்சாப் வெற்றியை உத்திரபிரதேச மாநிலத்தில் பிரம்மாண்டமாக கொண்டாட ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது. இதுபற்றி கூறுகையில் எங்களுக்கு கிடைத்த வெற்றியின் மூலம் மக்கள் எங்கள் தேசிய சக்தியாக அதிகரித்துள்ளதே நாங்கள் உணர்கிறோம். எங்களின் துடைப்பதின் மூலம் அரசியலை சுத்தப்படுத்த போகிறோம். உத்தரபிரதேசத்தில் அனைத்தும் எங்களின் கட்சி கிளைகள் நிறுவப்படும்.

அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதை நாங்கள் உறுதி செய்வோம். மார்ச் 23, 24 ஆம் தேதிகளில் மாவட்ட மற்றும் மாநில செயற்குழு கூட்டங்கள் நடத்தப்படும். உத்திர பிரதேச தேர்தல் கட்சியின் செயல்பாடு குறித்து அப்போது ஆலோசிக்கப்படும். உத்தர பிரதேசத்தில் பாஜக வுக்கும் சமாஜ்வாதி கட்சி க்கும் இடையே நேரடி போட்டி இருந்தது. இதனால் பிற கட்சிகளுக்கு இடம் இல்லாமல் போய்விட்டது. 5 மாநில சட்டசபை தேர்தல் உத்தரபிரதேசத்தில் தான் ஒரு இடத்திலும் வெல்லவில்லை அதேசமயம் கோவாவில் இந்த கட்சிக்கு மூன்று இடங்களில் வெற்றி கிடைத்தது குறிப்பிடத்தக்கதாகும். பஞ்சாபில் 60 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சி உ.பியில் 403 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியிலும் அது வெற்றி பெறவில்லை. உ.பி. தேர்தலில் பாஜக 255 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சிகளான அப்னா தளம் எஸ் 12 இடங்களையும், நிஷாத் பார்ட்டி 6 தொகுதிகளையும் வென்றது. சமாஜ்வாதிக் கட்சிக்கு 111 இடங்களில் வெற்றி கிடைத்தது. அதன் கூட்டணிக் கட்சியான சுலேதேவ் பாரதிய சமாஜ் கட்சிக்கு 6 சீட்டுகளும், ராஷ்டிரிய லோக்தளம் கட்சிக்கு 8 சீட்டுகளும் கிடைத்தன. காங்கிரஸ், ஜன் சத்தா தளம் ஆகியவற்றுக்கு தலா 2 சீட்டுகளும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடமும் கிடைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *