

விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் படந்தாலை சேர்ந்த சரண்யா ரமேஷ்பாபு வெற்றி பெற்றார்.
விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் இணையதளம் மூலம் நடத்தப்பட்டு, மொத்தம் 9 பேர் களம் கண்ட நிலையில், சாத்தூரை சார்ந்த சரண்யா ரமேஷ்பாபு – 923 வாக்குகளை பெற்று, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவராகிறார்.
வெற்றி பெற்ற பின்பு சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் அரசன் கார்த்திக் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்! சாத்தூர் காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் ஐயப்பன் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.


