• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை! அண்ணாமலை!தான் மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

Byகுமார்

Jan 3, 2022

வீரபாண்டிய கட்டபொம்மனின் 262 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவச் சிலைக்கு அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது..,
வீர பாண்டிய கட்டபொம்மன் அந்நியர்களை விரட்டியடித்தது போல அதிமுக தமிழகத்திற்கு எதிரானவர்களை, விரோதம் செய்பவர்களை விரட்டியடிக்கும். மதுரை மாநகராட்சி பகுதியில் எந்த விதமான வளர்ச்சிப்பணிகளும் நடைபெறவில்லை. கடந்த எட்டு மாதமாக தமிழக அரசு நிதி ஒதுக்கவில்லை. பாரபட்சமான முறையில் மதுரையை பார்க்கிறார்கள். மதுரையில் சாக்கடை ஓடுகிறது. சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மதுரை ஒரு மாநகராட்சி போல தெரியவில்லை.


முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. அந்தப்பணிகளை முடுக்கி விட வேண்டும். மதுரையில் உள்ள அமைச்சர்கள் மதுரையின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். மதுரைக்கு நிதி ஆதாரத்தை பெற்றுக்கொடுத்து மதுரை வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.


மதுரை மாநகராட்சியை கண்டித்து நாளை அதிமுக சார்பில் போராட்டம்.
திமுக வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதியில் 10 கோடி ரூபாய்க்கு சாலை அமைக்கப்பட நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவருடைய தொகுதிக்கு மட்டும் எப்படி நிதி ஒதுக்கப்பட்டது. மாநகராட்சி ஒதுக்கியதா மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியதா என்பது பற்றி தெரியவில்லை. எங்கள் சட்டமன்ற தொகுதிகள் புறக்கணிக்கப்படுகிறதா? குறுகிய கால சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றாலும் இது குறித்து கேள்வி எழுப்புவோம்.

அற்புதமான பாரதப்பிரதமர் நமக்கு கிடைத்துள்ளார். அவரை வரவேற்க வேண்டியது நம்முடைய எண்ணம். எங்கள் தலைமையின் எண்ணம். எல்லோரையும் ஒருங்கிணைப்போம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு, அண்ணாமலை. அண்ணாமலை தான். அதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அரசியல் கருத்துக்களை எங்கள் தலைவர்கள் பேசுவார்கள். திமுக ஆட்சியில் நல்லது நடந்தால் வரவேற்போம். மக்களுக்கு எதிராக எதுவும் நடந்தால் முதல் குரல் ஆணித்தரமாக நாங்கள் தான் கொடுப்போம் என்று பேசினார்.