• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

பா.ஜ.க. போட்டியில்லை?- அண்ணாமலை சூசக தகவல்

ByA.Tamilselvan

Jan 23, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக பேட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை சூசகமாக தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 27-ந்தேதி ஈரோட்டில் இடைத்தேர்தல் நடக்கிறது. இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடும் என எதிர்பார்த்த நிலையில் போட்டியில்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சூசக தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும் போது இடைத்தேர்தல் என்பது கட்சிகள் பலம் காட்டும் தேர்தல் அல்ல. கூட்டணிக்கென்று மரபு, தர்மம் உள்ளது. அதன்படி நடந்து கொள்ள வேண்டும். கூட்டணி தர்மப்படி நடந்து கொண்டால்தான் அனைவருக்கும் மதிப்பு இருக்கும். கூட்டணியில் பெரிய கட்சி அ.தி.மு.க. தான். ஈரோட்டில் அதிமுகவினர் பலர் இதற்கு முன்பாக வெற்றி பெற்றுள்ளனர். ஈரோட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் உள்ளனர். போட்டியிடக்கூடிய வேட்பாளர் பண பலம் மற்றும் அதிகார பலத்தை முறியடிக்கக்கூடியவராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். எனவே இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடவாய்ப்பு இல்லை என தெரிகிறது.