ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. எதைபற்றியும் கவலைப்படாதீர்கள் புயல் வேகத்தில் பணியாற்ற வேண்டும் என நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தவிட்டுள்ளார்.
கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகி கூறும்போது..ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தல், தற்போதைய சூழலில் அ.தி.மு.க.வுக்கு முக்கியமான தேர்தலாகும். இதனை கருத்தில் கொண்டு இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை தெரிவித்துள்ளார். . ஆளும் கூட்டணியில் உள்ள கட்சி போட்டியிடுகிறதே? நம்மால் வெற்றி பெற முடியுமா? என்று தளர்ந்து போகாமல் பணியாற்றுங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாமே வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையோடு புயல் வேகத்தில் தேர்தல் பணியாற்றுங்கள். அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பாரதீய ஜனதா கட்சி தனித்து போட்டியிடுவதா? இல்லை அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதா? என்பது பற்றி இன்னும் எந்த முடிவையும் அறிவிக்காத நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் அ.தி. மு.க.வினர் விருப்ப மனுக்களை பெற்றுக் கெள்ளலாம் என்று அறிவித்துள்ளார். இதையடுத்து ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.வினரும், கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் சுறுசுறுப்புடன் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.