• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

தேனிக்கு வருகை தந்த ரயிலை பாஜகவினர் பூக்களை தூவி உற்சாக வரவேற்பு..,

BySubeshchandrabose

Mar 20, 2026

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சென்னைக்கும் (செவ்வாய், வியாழன், ஞாயிறு), சென்னையில் இருந்து போடிநாயக்கனூருக்கும் (திங்கள், புதன், வெள்ளி) வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது

இந்த நிலையில் மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வந்த ரயில் சேவையை வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சென்னையில் இருந்து போடிநாயக்கனூருக்கும், போடியிலிருந்து சென்னைக்கும் வாரத்தில் சனிக்கிழமையை தவிர்த்து ஆறு நாட்கள் ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது

இந்த ரயில் சேவை நேற்று முதல் தொடங்கித் நிலையில் நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு காலையில் தேனி ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலை பாஜக கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்

தேனி மாவட்ட பாஜக தலைவர் ராஜபாண்டியன் தலைமையிலான பாஜக நிர்வாகிகள் ரயில் நிலையத்தில் கூடி பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.