
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில், கன்னியாகுமரியில் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் தேசியக் கொடி ஏந்தி சனிக்கிழமை பேரணி நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த வெறறியைக் கொண்டாடும் வகையிலும், முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்த பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும் இப்பேரணி. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தின் வளாகத்தில் இருந்து தொடங்கியப்

இப்பேரணியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாநில பாஜக செயலர் மீனாதேவ், மாவட்ட பாஜக தலைவர் கே.கோபகுமார், மாவட்ட பொருளாளர் பி.முத்துராமன், மாவட்ட செயலர் சி.எஸ்.சுபாஷ், மாவட்ட துணைத்தலைவர் ஜெகந்நாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.சுடலைமணி மற்றும் மாநில நிர்வாகி உமாரதி ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த ஊர்வலம் விவேகானந்தபுரம் சந்திப்பில் தொடங்கி காவல் நிலையம் வழியாக காந்தி மண்டபத்தில் நிறைவடைந்தது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேசியக்கொடி ஏந்தி சென்றனர்.
தேசப்பித காந்தியடிகளின் நினைவு மண்டபம் முன் நடைப்பயணம் நிறைவடைந்தது.
நடைபயணம் நிறைவடைந்த இடத்தில் பேசிய பொன்னார்.இந்தியா, இதுவரை பாக்கிஸ்தானுடன் நடந்த எந்த தேர்தலிலும் தோல்வி அடைந்ததே இல்லை.
இந்தியா நினைத்தால் பாக்கிஸ்தானுடன் போர் தொடுத்து. உலக வரைபடத்தில்
பாக்கிஸ்தான் என்றொரு நாட்டையே இல்லாமல் செய்துவிடும்.
இந்தியா எப்போதும் போரை விரும்புவதில்லை என தெரிவித்தார்
பொன்.இராதாகிருஷ்ணன்.
