

இந்தியாவிற்காக எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்கள் நலமுடன் இருந்து வெற்றிகளை தொடர்ந்திட இறைவனிடம் பிரார்த்தனை செய்தல் மற்றும்
கழகப் பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின்
71-வது பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பாக போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது.

குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்து
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். வீரர்கள் உட்பட முப்படை வீரர்கள் நலமுடன் இருந்து நாட்டினை பாதுகாத்து வெற்றிகளை தொடர்ந்திட இறைவனிடம் பிரார்த்தனை செய்தல் மற்றும் கழகப் பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பாக நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டத்தினை குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான த என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
இதனை முன்னிட்டு இன்று (16-05-2025) காலை 6 மணிக்கு நாகர்கோவிலில் குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பிருந்து தொடங்கியது. இதற்கு குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி 25-வது வார்டு செயலாளருமான அக்சயாகண்ணன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான கே.டி.பச்சைமால், நாகர்கோவில் மாநகர பகுதி கழகச் செயலாளர்கள் வழக்கறிஞர் ஜெயகோபால், வழக்கறிஞர் முருகேஷ்வரன், ஜெபின்விசு, ஸ்ரீலிஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்கள் கையில் தேசிய கொடிகளை ஏந்தி இந்திய எல்கைகளில் பணிபுரியும் முப்படை வீரர்களின் நலனுக்காக பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தினை கழக அமைப்புச் செயலாளரும், குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.

