பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று இந்திய மக்களுக்கு இனிப்பான தீபாவளி செய்தி காத்திருக்கிறது எனக் கூறினார்.
அதன் பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மத்திய அரசு ஜி ஜி எஸ் டி வரி விதிப்பில் பல்வேறு வரிக்குறைப்பு சீர்திருத்தமாற்றங்களை கொண்டு வந்தது.
ஜிஎஸ்டி வரி விதிப்பில் மிகப்பெரிய அளவில் வரி குறைப்பு செய்யப்பட்டது இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அன்றாட பயன்படுத்தும் பொருட்களின் விலை பாதி அளவு குறைந்துள்ளது.

இந்த வரி சீர்திருத்த குறைப்பு நடவடிக்கை இன்றிலிருந்து இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வான வேடிக்கை நிகழ்த்தி பட்டாசுகள் வெடித்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இனிப்புகள் வழங்கி ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்குநன்றி கூறி கோஷங்கள் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
