• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பாஜக பிரமுகர்

Byவிஷா

Apr 18, 2024

கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வெற்றி பெற வேண்டி, பாஜக பிரமுகர் ஒருவர் கைவிரலை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடுவதால் பாஜகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அந்த வகையில் கடலூர் மாவட்ட பாஜக துணை தலைவராக இருக்கும் கடலூர் மாவட்டம் ஆண்டாள் முள்ளி பாளையம் பகுதியைச் சேர்ந்த துரை ராமலிங்கம் என்பவர் கோவை நாடாளுமன்ற தொகுதியில் அண்ணாமலைக்காக தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அண்ணாமலை வெற்றி பெற வேண்டுமென கத்தியபடி இடதுகை ஆள்காட்டி விரலை வெட்டித் துண்டித்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தன் பிரச்சாரம் செய்தபோது அருகில் இருந்தவர் அண்ணாமலை தோல்வியை சந்திப்பார் என கூறியதால் அவர் வெற்றி பெற வேண்டி தனது கைவிரலை துண்டித்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.