
‘வேட்பாளர்கள் பட்டியலை பாஜக, மீதமுள்ள வார்டுகளுக்கு ஆட்கள் கிடைக்காததால் போட்டியிடவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திடீர் திருப்பதாக அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறியது. இதனால் இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி, தேமுதிக, அமமுக என 7 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணியோடு தேர்லை சந்திக்கிறது.
அதிமுக கூட்டணியில் இருந்த பாஜ கூடுதல் சீட் கேட்டு முரண்டு பிடித்ததால் கூட்டணி உடைந்து தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநில தலைமை அறிவித்துள்ளது. இதனிடையே தனித்து போட்டியிடும் பாஜக நேற்றிரவு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடுள்ளது. இதில் ஈரோடு மாநகராட்சிக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஈரோட்டில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 20 வார்டுகளுக்கான வேட்பாளர் பெயர் மட்டுமே பட்டியலில் உள்ளது. மீதமுள்ள 40 வார்டுகளிலும் போட்டியிட ஆட்கள் இல்லாததால் அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை ஈரோடு மாவட்ட அதிமுகவினரே கிண்டல் அடித்துள்ளனர். அதாவது கூட்டணியில் இருந்து வெளியேறியதை விமர்சித்துள்ளனர். அண்ணாமலை அவசரப்பட்டு கூட்டணியில் இருந்து வெளியேறியதாகவும் அதிமுகவினர் கூறுகின்றனர்.
அதே வேளையில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது முதல்கட்ட பட்டியல் தான் மீதமுள்ள வார்டுகளுக்கு ஆட்களை நிறுத்துவது தொடர்பாக பேசி வருவதாக பாஜவினர் கூறியுள்ளனர்.
