• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விநாயகர் சதுர்த்தி வேண்டான்னா; பிக்பாஸ் மட்டும் எதுக்கு?

Bigg boss

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டுமென மயிலாடுதுறை காவல்நிலையத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பாஜக நகர தலைவர் மோடி கண்ணன் புகார் மனு அளித்துள்ள புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்து கலாச்சாரத்துக்கு எதிராகவும், நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை அதிக மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும், பங்கேற்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

கொரோனா 3வது அலை அச்சம் காரணமாக கோவில்களை திறக்கவும், விநாயகர் சதுர்த்தி நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ள போது பிக்பாஸ் நிகழ்ச்சி தேவையற்றது என்றும், இந்த நிகழ்ச்சியை தயாரிக்க 500க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடுகின்றனர். எனவே, கொரோனா காலத்தில் கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.