• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோவாவில் தலைசுற்ற வைக்கும் பாஜக வேட்பாளரின் சொத்து மதிப்பு

Byவிஷா

Apr 18, 2024

கோவா தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பல்லவிஸ்ரீனிவாசுக்கு சொத்து மதிப்பு 1400 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் அனைவருக்கும் தலைசுற்றலை ஏற்படுத்தியிருக்கிறது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்தியா மக்களவை பொதுத் தேர்தல் நாடு முழுவதும் நாளை துவங்குகிறது. மொத்தம் ஏழு கட்டங்களில் மக்களவைத் தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 19ல் துவங்கும் தேர்தல் ஜூன் 1 வரை நடக்கிறது. அதன்படி, ஜூன் 4 வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் வெளியாகிறது.
கோவா மாநிலத்தில் கோவா (வடக்கு), கோவா (தெற்கு) என இரண்டே இரண்டு மக்களவைத் தொகுதிகள் இருக்கிறது. அந்த வகையில், வருகின்ற மே 7 வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. அதன்படி தற்போது, கோவா மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. நாளையோடு கோவாவில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைகிறது.
கோவா (தெற்கு) தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் பல்லவி ஸ்ரீநிவாஸ் டெம்போ. இவர் கடந்த ஏப்ரல் 16 அன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, அவரது சொத்து மதிப்பையும், அவருடைய கணவரின் சொத்து மதிப்பையும் தேர்தல் ஆணையத்தில் சமர்பித்தார். 119 பக்க ஆவணத்தை தேர்தல் ஆணையத்தில் சமர்பித்து இருக்கிறார் பல்லவி.
அரசியல் களத்திற்கு மிகவும் புதிய முகம்தான் தெற்கு கோவாவில் பாஜக சார்பில் போட்டியிடும் பல்லவி டெம்போ. இவர் பிரபல தொழிலதிபரான ஸ்ரீநிவாஸ் டெம்போ என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். ஸ்ரீநிவாஸ் டெம்போ, கால்பந்து, ரியல் எஸ்டேட், கப்பல் கட்டுமானம், கல்வி நிறுவனங்கள், சுரங்கங்கள் என பல துறைகளில் தொழில் செய்து வரும் டெம்போ நிறுவனத்தின் தலைவராகும்.
பல்லவி டெம்போ தெற்கு கோவாவில் போட்டியிடுவதற்காக அவரது சொத்து மதிப்பை சமர்பித்து இருந்தார். அதில், பல்லவி டெம்போவின் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.255.4 கோடி என்றும் அவரது கணவரின் சொத்து மதிப்பு ரூ. 994.8 கோடி என்றும் குறிபிடப்பட்டுள்ளது. இவை மட்டுமல்லாது, பல்லவி டெம்போ பெயரில் சுமார் 28.2 கோடி ரூபாய் அளவிலான அசையா சொத்தும் இருக்கிறது. மேலும், பாஜக வேட்பாளர் பல்லவியின் கணவரின் நிகர மதிப்பு சுமார் ரூ.83.2 கோடி எனவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மேலும், கோவா மட்டுமன்றி துபாய் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த ஜோடிக்கு எக்கச்சக்க சொத்துக்கள் இருக்கிறது. குறிப்பாக, துபாயில் இருக்கும் சவண்ணா பகுதியில் இந்த ஜோடிக்கு சொந்தமான அபார்ட்மெண்ட் ஒன்று இருக்கிறது. இதன் சந்தை விலை சுமார் 2.5 கோடி ரூபாய் ஆகும். மேலும், லண்டனிலும் இவர்களுக்கு சொந்தமான ஒரு அப்பார்ட்மெண்ட் இருக்கிறது. இதன் மதிப்பு ரூ. 10 கோடி எனவும் தேர்தல் ஆணையத்தில் சமர்பித்த ஆணை பாத்திரத்தில் குறிபிடப்பட்டு இருக்கிறது.
இவை மட்டுமன்றி, பல்லவி டெம்போவிடம் சுமார் ரூ.5.7 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் இருக்கின்றன. கடந்த 2022-2023 நிதியாண்டில் பல்லவி 10 கோடி ரூபாயும், ஸ்ரீநிவாஸ் டெம்போ 11 கோடி ரூபாயும் வரி செலுத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.