• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வீடியோவில் வசமாக சிக்கிய பாஜக அண்ணாமலை

ByA.Tamilselvan

Sep 11, 2022

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காலில்மாணவி ஒருவர் விழுந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். இதில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஒருவரை பாராட்டினார். அப்போது அருகில் இருந்த பாஜக விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத்ரெட்டி அந்தமாணவியிடம் அண்ணாமலை காலில் விழுமாறு கண்ணை காட்டுகிறார்.

உடனே அந்த மாணவி காலில் விழுந்ததும் அண்ணாமலை அவரை தடுத்து காலில் விழுவது தவறு என்று அறிவுரை கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.